←← 20. மணிமேகலையை வெளியிட்டது

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்  ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்21. கிராமதானத்தை மறுத்தது

22. ஹாவ்லக் பிரபு விஜயம் →→

 

 

 

 

 


440008தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 21. கிராமதானத்தை மறுத்ததுகி. வா. ஜகந்நாதன்

 

 


கிராமதானத்தை மறுத்தது


ஆசிரியர் பதிப்பித்த மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றுக்கு உதவி செய்தவர் இராமநாதபுரம் பொ. பாண்டித்துரைத் தேவர் ஆவர். அவர் மதுரையில்                         
தமிழ்ச்சங்கத்தை உண்டாக்கிப் பல நூல்களை வெளியிட்டார். அதோடு 'செந்தமிழ்’ என்ற இலக்கியப் பத்திரிகையையும் வெளியிட்டு     
வந்தார். அவருடைய தாயார் 1898-ஆம் ஆண்டு இறைவன் திருவடியை அடைந்தார். அது காரணமாக  இராமநாதபுரம் சென்று துக்கம் விசாரித்து வரவேண்டுமென்று ஆசிரியர் எண்ணினார். அப்போது இராமநாதபுரத்திற்குப் புகைவண்டி இல்லை; மதுரைபோய் அங்கிருந்து வண்டி வைத்துக்கொண்டு போகவேண்டும்.
ஆசிரியரும், அவருடைய குமாரரும் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரையை அடைந்து அங்குள்ள திருவாவடுதுறை மடத்தில் தாங்கினார்கள். அங்கிருந்து புறப்பட்டுப் பரமக்குடி போனார்கள். வைகையில் வெள்ளம் வந்த காரணத்தினால் 3 நாள் அங்கேயே தங்கவேண்டி வந்தது. பின்னர்தான் இராமநாதபுரம் போய்ச் சேர முடிந்தது.
இராமநாதபுரத்தில் பாண்டித்துரைத் தேவர் தங்கியிருந்த அரண்மனைக்குச் சோமசுந்தர விலாசம் என்று பெயர். ஆசிரியர் அங்கே ஒரு மாத காலம் தங்கியிருந்தார். காலையிலும், மாலையிலும் ஆசிரியர் பாண்டித்துரைத் தேவரைச் சந்தித்து உரையாடினார்.ߵߵஎன்னுடைய தாயார் இறந்துபோன துக்கத்தைச் சம்பிரதாயமாக விசாரிக்க வந்தீர்கள். உங்களோடு சல்லாபம் செய்துகொண்டிருப்பதில் என் அன்னை இறந்துபோன துக்கமே மாறிவிட்டது. என்னுடைய தாயார் மிகச் சிறந்தவர். அவர் வாழ்ந்திருந்த காலத்திலும் எனக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்தார்கள். இறந்த பிறகும் உங்களை எல்லாம் வரும்படி செய்து எனக்குத் தமிழின்பம் உண்டாகச் செய்தார்கள்’’ என்று  அவர் நயமாகப் பேசினார்.
ஒரு நாள் பாண்டித்துரைத் தேவர் அரசராகிய பாஸ்கர சேது பதியைப் பார்க்கப் போனார், அவரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குப் புறப்படும்போது சேதுபதி ஒரு முக்கியமான சமாசாரம் சொல்லவேண்டுமென்று அவரிடம் ஒரு கருத்தைத் தெரிவித்தார்.ߵߵஅது மிகவும் பொருத்தம்ߴߴ என்று பாண்டித்துரைத் தேவர் சொல்லிவிட்டு, ஆசிரியர் தங்கியிருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தார். ஆசிரியர் அவரை வரவேற்று உட்காரச் செய்தார்.ߵߵஉங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றைச் சொல்ல வந்திருக்கிறேன்ߴߴ என்று பாண்டித்துரைத் தேவர் சொன்னவுடன், ߵߵஏதாவது புதிய நூலைப் பதிப்பிக்க வேண்டுமென்று சொல்லப் போகிறீர்களா?ߴߴஎன்று  கேட்டார் இவர்.

ߵߵஒரு நூல் அல்ல, பல நூல்களை நீங்கள் பதிப்பிக்கலாம். அந்த அளவுக்குச் செல்வம் அளிக்குமாறு ஒரு கிராமத்தையே உங்கள் பெயரில் எழுதிவைக்க மகாராஜா நினைக்கிறார்’ என்றார்
 பாண்டித்துரைத் தேவர். “நான் இன்று அரண்மனை போயிருந்தேன். பாஸ்கர சேதுபதி அவர்கள் இந்தச் செய்தியைத் தெரிவித்தார்கள்” என்று சொன்னார். “இந்நாள் வரை தங்களுக்கு எந்தவிதமான உதவியும் அவர் செய்யாமல் இருந்தது பெரிய தவறு என்று நினைக்கிறார்கள். ஆகவே தம் ஜமீனிலுள்ள ஒரு கிராமத்தையே தங்களுக்கு வழங்க எண்ணுகிறார் . இந்தச் செய்தியைத் தங்களிடம் தெரிவிக்கும்படி என்னிடம் சொன்னார்” என்றார்.
இதைக் கேட்டவுடன் பாண்டித்துரைத் தேவர் எதிர்பார்த்தபடி ஆசிரியருக்கு மகிழ்ச்சி அதிகமாக உண்டாகவில்லை. அவரிடம், “மகாராஜா அவர்களுடைய எல்லையற்ற அன்பை நான் இதனால் உணர்ந்துகொள்கிறேன். என்னுடைய கருத்தை நான் அவர்களிடமே நேரில் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டார்.
ஆசிரியர் பாஸ்கர சேதுபதியைப் பார்க்கச் சென்றபோது, தம்முடைய விருப்பத்தை ஏற்று, தமக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறார் என்றே மன்னர் எண்ணினார். ஆசிரியரும், தம் பேச்சில், எடுத்தவுடன் இதைச் சொல்லவில்லை. சிறிதுநேரம் வேறு விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, முடிவில் சொன்னார்:
“பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மகாராஜா சொல்லி அனுப்பிய செய்தியைத் தெரிவித்தார். அதன் மூலம் மகாராஜா அவர்களுக்கு என்பால் எவ்வளவு அன்பும், நம்பிக்கையும் இருக்கின்றன என்பதை உணர்ந்துகொண்டேன். எனக்கு இப்போது ஒன்றும் குறை இல்லை. ஆண்டவன் திருவருளால் கல்லூரியில் சம்பளம் வருகிறது. நான் செட்டாக வாழத் தெரிந்தவன். தாங்கள் வழங்குவதை ஏற்க மறுக்கிறேன் என்று எண்ணக்கூடாது. சமஸ்தானத்தின் நிலைமையும் எனக்கு நன்கு தெரியும். இந்த நிலையில் இப்போது அவ்வளவு பெரிய கொடையைத் தங்களிடமிருந்து ஏற்பதற்கு என் மனம் உடன்படவில்லை” என்று சொன்னார். அப்போது அந்தச் சமஸ்தானம் பலவிதக் கடன் தொல்லைகளுக்கு உள்ளாகியிருந்தது. எனவே, ஆசிரியர் கருத்தை உணர்ந்துகொண்டு ஒரு பதிலும் சொல்லாமல் சிறிது நேரம் மெளனமாக இருந்தார் மன்னர். பின்னர், “தங்கள் விருப்பம்” என்று சொல்லி விடை கொடுத்தனுப்பினார். தமக்குக் கிடைக்க இருந்த ஒரு கிராமத்தையே தாம் இழந்துவிட்டோமே என்ற எண்ணம் ஆசிரியருக்கு எந்தக் காலத்திலும் எழுந்தது இல்லை. 
கும்பகோணம் கல்லூரியில் அந்தக் காலத்தில் ராவ்பகதூர் வி. நாகோஜிராவ் என்பவர் முதல்வராக இருந்தார். அவர் இசையில் நல்ல ஞானம் உள்ளவர். இசை சம்பந்தமான புத்தகங்களை அவர் வெளியிட இருந்தார். அவற்றைத் திருத்தமாக வெளியிட வேண்டும் என்று விரும்பியதால் அவற்றைத்  திருத்திக்கொள்ள ஆசிரியப் பெருமானை நாடினார். அப்படியே ஆசிரியரும் திருத்தித் தந்தார். ஏதாவதொரு வகையில் ஆசிரியருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்ற விருப்பம் நாகோஜிராவுக்கு உண்டாயிற்று.
ஒருநாள் ஆசிரியரைப் பார்த்துச் சொன்னார்: “நீங்கள் தமிழிலுள்ள பழைய நூல்களைப் பதிப்பித்து வருகிறீர்கள். அதனால் உங்களுக்கு லாபம் எதுவும் இல்லை என்று எனக்குத் தெரியும். வேறு வகையில் உங்களுக்கு வருவாய் அதிகமானால் இந்தப் பதிப்பு வேலைகளுக்கும் உதவியாக இருக்கும் என்று தோன்றியது. பள்ளிக் கூடப் பாட நூல்கள் இப்போது தரமாக வருவதில்லை. நீங்கள் எழுதிக் கொடுத்தால் நன்றாக இருக்கும். மூன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் பாரம் வரைக்கான பாட நூல்களை நீங்களே எழுதிக் கொடுத்தால் அவற்றை லாங்மன்ஸ் அச்சகத்தார் வெளியிடுவார்கள். அவர்கள் உங்களுக்குத் தக்க சன்மானம் கொடுப்பார்கள். அதைக்கொண்டு தமிழ்த் தொண்டு செய்து வரலாம்” என்றார். ஆசிரியர் சிறிது யோசனை செய்தார்.
நான் உங்கள் அன்பைப் பாராட்டுகிறேன். என் தொல்லை உங்களுக்குத் தெரிந்திருப்பது எனக்கு ஆறுதலாக உள்ளது. உங்களைப் போன்று வேறு சில அன்பர்களும் நான் பாடப் புத்தகங்களை எழுதவேண்டுமென்று சொன்னார்கள். எனக்குப் பணம் முக்கியமல்ல. என்னுடைய நேரம் முழுவதும் கல்லூரியில் பாடம் சொல்வதிலும் மற்றச் சமயங்களில் தமிழ் நூல்களை ஆராய்வதிலுமே கழிந்து கொண்டிருக்கிறது. பணம் வரத் தொடங்கினால் ஆசை வேறு வழிகளில் ஏற்பட்டுவிடும். பிறகு எனக்கு ஆராய்ச்சி செய்வதற்கு நேரம் இருக்காது. பழைய நூல்களைப் பதிப்பிக்கவும் தோன்றாது. நான் தங்கள் யோசனையை மறுப்பதாக எண்ணக் கூடாது. என் போக்கிலே என்னை விட்டுவிடுங்கள்” என்று நயமாகச் சொன்னார். நாகோஜிராவ், வலிய வருவாய் கிடைத்தாலும் கூட இவர் வேண்டாம் என்கிறாரே! இவருக்குப் பழைய தமிழ் நூல்களில் இருக்கிற ஆசைதான் எத்தனை! என்று எண்ணி வியந்தார்.
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel