←← 34. பிற நூல்களின் வெளியீடு
தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்35. வ. உ. சிதம்பரம் பிள்ளையின் கடிதம்
36. அச்சகம் வாங்க விரும்பாமை →→
440022தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 35. வ. உ. சிதம்பரம் பிள்ளையின் கடிதம்கி. வா. ஜகந்நாதன்
வ. உ. சிதம்பரம் பிள்ளையின் கடிதம்.
1908-ஆம் ஆண்டு ஆசிரியருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தின் மேலே சிறை அதிகாரிகள் தணிக்கை செய்திருந்த குறிப்பு இருந்தது. சிறையிலிருந்து யார் எழுதியிருப்பார்கள் என்று எண்ணி ஆசிரியர் அதைப் பிரித்துப் பார்த்தார்.
கப்பலோட்டிய தமிழராகிய வ. உ. சிதம்பரம் பிள்ளை கோயம்புத்தூர்ச் சிறையில் அப்போது இருந்தார். அவரே அந்தக் கடிதத்தை 14-9-1908-ஆம் தேதி எழுதியிருந்தார். அவர் திருக்குறளைச் சிறையில் ஆராய்ச்சி செய்துவந்தார். தாம் திருக்குறள் ஆராய்ச்சி செய்து வருவது பற்றியும், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருவது பற்றியும் குறித்திருந்தார். அதில் தமக்கு ஏற்பட்டுள்ள ஐயங்கள் சிலவற்றை எழுதி அவற்றை விளக்கவேண்டு மென்று கேட்டிருந்தார். ஆசிரியப் பெருமானும் தக்க விடைகளை எழுதி அனுப்பினார்.