←வாழ்க்கை

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிஆடவர்

பெண்கள்→

 

 

 

 

 


439216குடும்பப் பழமொழிகள் — ஆடவர்தியாகி ப. ராமசாமி

 

 


ஆடவர்


மனிதன் ஆறு - பெண் ஏரி.  - குர்திஸ்தானம்  
பத்து நாள் பெண்ணாயிருப்பதைவிட ஒரு நாள் ஆணாயிருப்பது மேல்.  -( ,, ) 
ஆணும் பெண்ணும் மண்வெட்டியும் வாளியும்போல.  -( ,, )  
பெண் ஒரு கோட்டை -ஆண் அவள் கைதி.  -( ,, )  
ஆடவர் நெல், பெண்டிர் குத்திய அரிசி.  -சயாம் 
(நெல் தானாக முளைக்கும், அரிசி முளைக்காது.) மனிதர்களுக்குக் குணத்திற்கு முன்னால் அறிவு தேவை; பெண்களுக்கு அறிவுக்கு முன்னால் குணம் தேவை.

 -ஜெர்மனி  
தனியாயிருக்கும் பிரமசாரி மயில், காதல் புரிய ஒரு கன்னி கிடைத்தவன் சிங்கம், கலியாணமானவன் கழுதை.  -( ,, ) 
பிரமசாரியும் நாயும் எதையும் செய்யலாம்.  -போலந்து  
மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு; ஆனால் நீ தனித்திரு.  - இதாலி  
பிரமசாரி தண்ணீரில்லாத வாத்துப் போன்றவன்.  -ரஷ்யா  
தினசரி க்ஷவரம் செய்துகொள்வதைவிட வருடத்திற்கு ஒரு பிள்ளை பெறுவதே எளிது.  -( ,, ) 
[ரஷ்ய சிப்பாய்கள் இவ்வாறு தங்கள் மனைவியரிடம் சொல்வது வழக்கம்.) 

ஆடவர் அழகை ஒரு குணமாகப் பார்க்கின்றனர்; பெண்கள் குணத்தை அழகாகப் பார்க்கின்றனர்.  - ஸ்பெயின்  
சேவல் தன் குப்பை மேட்டிலிருந்துதான் கூவும், கோழி ஊரெங்கும் சுற்றிக் கூவி வரும்.  -ஸ்பெயின்  பொன்னுக்குச் சோதனை நெருப்பு; பெண்ணுக்குச் சோதனை பொன்; மனிதனுக்குச் சோதனை பெண்.  - அமெரிக்கா  
பத்து மனிதரில் ஒன்பது பேர் பெண்கள்.  - துருக்கி 
(பெரும்பாலோர் ஆண்மையில்லாதவர்கள்.) ஆண்பிள்ளையின் சொற்கள் அம்பு போன்றவை; பெண் பிள்ளையின் சொற்கள் ஒடிந்த விசிறி போன்றவை.  சீனா 
பெண் அடிமையாயிருந்தால், ஆண் சுதந்திரமாக யிருக்க முடியுமா?  -ஷெல்லி  மற்றவர்களுடைய பெண்களிடத்திலும், பணத்தினிடத்திலும் விளையாட வேண்டாம்.
 - இங்கிலாந்து 
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel