←பெண்கள்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிகாதல்

பெண் பார்த்தல்→

 

 

 

 

 


439218குடும்பப் பழமொழிகள் — காதல்தியாகி ப. ராமசாமி

 

 


காதல்

 
நான்கு கண்கள் சந்தித்ததும், இதயத்தில் காதல் தோன்றிற்று.  -இந்தியா  
காமம், நெருப்பு, இருமல் இம்மூன்றும் மறைக்க முடியாதவை.  -( ,, )  
இளம் காதலர்கள் விரும்புகிறார்கள், விவாகமான மனிதர்கள் வருந்துகிறார்கள்.  -( ,, ) 
காதல் சாதி வேற்றுமைகளைக் கண்டு சிரிக்கின்றது.  -( ,, ) 
ஒரு மனிதன் பெண்ணின் பின்னால் ஓடினால் திருமணம்; ஒரு பெண் மனிதன் பின்னால் ஓடினால் அவளுக்கு அழிவு.  -( ,, ) 
காதல், கஸ்தூரி, இருமல் மூன்றையும் அடக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.  -( ,, ) 
காதலன் கண்ணுக்கு அம்மைத் தழும்புகளும் அதிருஷ்டக் குறிகளாகும்.  -ஜப்பான்  காதலுக்கும் தொழு நோய்க்கும் தப்புவோர் சிலரே.  -சீனா  
அதிருஷ்டமுள்ளவன் ஒரு நண்பனைச் சந்திக்கிறான், அதிருஷ்டம் கெட்டவன் ஓர் அழகியைச் சந்திக்கிறான்.  -( ,, ) 
காதலையும் கர்ப்பத்தையும் மறைத்து - வைக்க முடியாது.  -அரேபியா  
காதல் ஏழு விநாடி, துக்கம் வாழ்க்கை முழுதும்.  -( ,, )  
உன் காதலுக்கு ஒரு மணி நேரம், உன் இறைவனுக்கு ஒரு  மணி நேரம் செலவிடு.  -( ,, )  தூக்கம் வந்து விட்டால், தலையணை தேவையில்லை; காதல் வந்து விட்டால், அழகு தேவையில்லை. 
 -ஆப்கானிஸ்தானம்  
காதலும் பேராசையும் போட்டியைச் சகிக்கமாட்டா.

 - ஃபிரான்ஸ்  காதலுடனும் நெருப்புடனும் மனிதன் பழகிப் போகிறான்.
 -ஃபிரான்ஸ்  
பெண்கள், காடைகள், வேட்டை நாய்கள், ஆயுதங்கள் இவைகளில் ஓர் இன்பத்திற்காக ஆயிரம் வேதனைகள்

 -( ,, )  
காதலைத் தடுத்தல் அதைத் தூண்டிவிடுவது போன்றது.  -( ,, ) 
காதல் வந்து விட்டால், கழுதைகளும் நடனமாடும்.  -( ,, )  
அதிகக் காதலுள்ளவர்கள் மிகக் குறைவாகப் பேச வேண்டும்.  -ஸ்காட்லந்து  
காதலுக்கும் செல்வத்திற்கும் துணை வேண்டியதில்லை.

 -செர்பியா  
பெண்ணின் காதல் சயித்தானின் வலை.  -( ,, ) 
திருமண இரவுதான் காதலின் கடைசி இரவு.  -சைலீஷியா  
காதல் இனிமையான சிறைவாசம்.  -ஸ்லாவேகியா  
கெட்டிக்காரப் பெண், தான் காதலிப்பவனை விட்டு ,

தன்னைக் காதலிப்பவனை மணப்பாள்.  -( ,, )  
செயல்களே காதல், இனிமையான சொற்களல்ல.

 - ஸ்பெயின்  
காதல் வெட்கப்பட்டால், அது உண்மையானதன்று.  -( ,, ) 
ஒரு காதல் மற்றொன்றை வெளியேற்றிவிடும்.  -( ,, )  
காதல் சுளுக்குப் போன்றது, இரண்டாம் தடவை அது எளிதில் வந்துவிடும்.  -( ,, ) 
ஒரு பெண்ணின் காதல் கூடையிலுள்ள தண்ணீர் போன்றது.  -ஸ்பெயின்  
காதலின் பார்வையில் செம்பு தங்கமாயிருக்கும், ஏழைமை செல்வமாகும்.  -( ,, ) 
'சூப்'பிலும் காதலிலும் முதலாவது தான் சிறந்தது.  -( ,, )  
தேர்ந்தெடுப்பது என்பது காதலில் இல்லை.  -( ,, )  நெருப்புக்குக் காற்று எப்படியோ, அப்படிக் காதலுக்குக் பிரிவு.  -ஸ்பெயின்  
சாளரக் கம்பிகளின் இடைவழியாகவே காதலுக்கு உயிர் வருகிறது.  -( ,, ) 
காதலர் மற்றவர் கண்களெல்லாம் அவிந்து விட்டது போல எண்ணுவர்.  -( ,, ) 
காதலர்களுக்குத் தக்க நேரம் தெரியும்.  -ஜெர்மனி  
காப்பியும் காதலும் சூடா யிருந்தால்தான் உருசி.  -( ,, )  
காதல்தான் காதலை வெல்ல முடியும்.  -( ,, ) 
காதல் அணைந்தபின் கரித்துண்டுகளே மிஞ்சும்.  -( ,, )  
காதல் அகழெலி, கல்யாணம் காட்டுப் பூனை.  -( ,, )  
காதலின் உச்சத்தில் பேச்சுக் குறைந்து விடும்.  -( ,, )  
காதல் குருடன்று, ஆனால் அது பார்ப்பதில்லை.  -( ,, )  
காதலுக்குக் காலம் கிடையாது.  -( ,, )  காதலர்களுக்கு காதவழி ஓர் அடியாகத் தோன்றும்.  -( ,, ) 
காதலின் கண்ணுக்கு ரோஜா மலர் தான் தெரியும், முட்கள் தெரியமாட்டா.  -( ,, ) 
அழகைக் காதலித்தல் என்பதில்லை, காதலித்ததே அழகாகும்.  -( ,, ) 
காதற் கடிதங்களுக்குத் தேதி தேவையில்லை.  -( ,, )  
பேட்டையிலும் காதலிலும் ஒருவருக்குத் தொடங்கத்

தெரியும், எங்கு முடிப்பது என்பது தெரியாது.  -( ,, )  
காதலர்கள் பேச வேண்டிய விஷயம் அதிகம், ஆனால் அது ஒரே பழைய விஷயம்தான்.  -( ,, ) 
காதலர்கள் நேரத்தை ஆசையைக் கொண்டு அளக்கின்றனர்.  -( ,, ) 
சிறு ஊடல் காதலைப் புதுப்பிக்கும்.  -( ,, ) 
எல்லா இடங்களிலும் கண்களின் பாஷை ஒன்று தான்.

 - இங்கிலாந்து  
முத்தங்கள் திறவுகோல்கள்.  -( ,, )  ஒருபெண்ணையும் காதலிக்காதவன் பன்றியிடம் பால் குடித்திருப்பான்.  - இங்கிலாந்து  
காதலுக்கு மருந்தில்லை, மருத்துவனுமில்லை.  -அயர்லந்து  
காதல் ஒன்றுதான் பங்காளிகளை அனுமதிக்காது.

 -பல்கேரியா  
ஒருவன் சகோதரனைத் தேடிக் கடல் வரை போவான்;. காதலியைத் தேடிக் கடலுக்குள்ளேயும் போவான்.

 -பல்கேரியா  
உருளைக் கிழங்கையும், காதலனையுமே ஒரு பெண் தானாகத் தேர்ந்தெடுக்கிறாள்.  - ஹாலந்து  காதற் கடிதங்களை எழுதுவோர் மெலிகின்றனர், கொண்டு கொடுப்பவர்கள் கொழுக்கிறார்கள்.
 -( ,, )  [காதலரின் தூதர்களுக்கு இருபக்கங்களிலும் வெகுமதிகள் நிறையக் கிடைக்கும்.] 
வானத்தில் பறவையின் பாதையைக் காணமுடியாது,

கன்னியை நாடும் காதலன் பாதையையும் காண முடியாது.  -எஸ்டோனியா  
காதலில் துரு ஏறாது.  -( ,, )  .
காதல் என்பது மலர், கலியாணத்தில் அது கனியாகும்.

 - ஃபின்லந்து  
காதல் நந்தவனம், கலியாணம் முட்புதர்.  -( ,, ) 
காதல் உண்டாக்கும் புண்ணை அதுவே ஆற்றிவிடும்.

 - கிரீஸ்  
காதல் மடமை இரண்டுக்கும் பெயரில் தான் வேற்றுமை.

 -ஹங்கேரி  
கனவிலும் காதலிலும் இயலாத காரியமே இல்லை.  -( ,, )  
அடிக்கடி முத்தமிட்டால் குழந்தையை எதிர்பார்க்க வேண்டியதுதான்.  -ஐஸ்லந்து  கலியாணத்திற்குப் பின்னால் காதல் வளரும்.  -( ,, )  
காதல் கொண்டவர்களின் கோபம் சிலந்தி வலை போன்றது.  - இதாலி  ஒரே பெண்ணையோ, ஒரே 'பஸ்'ஸையோ தொடர்ந்து
ஓட வேண்டாம், பின்னால் வேறு கிடைக்கும்.  -இத்தாலி  
காதலிக்கும் காலத்தில் ஜூபிடரும் கழுதையாவார்.

 -லத்தீன்  
[ஜூபிடர்-தேவர்களின் அதிபதியான கடவுள். கிரீஸில் இவரை 'சீயஸ்' என்பர்.] 

பழைய காதல் ஒரு சிறைச்சாலை.  -( ,, )  காதலின் தூதுவர்கள் கண்கள்.  - லத்தீன்  காதலிலே தோன்றும் கோபம் போலியானது.  -( ,, )  
காதலர் கோபம் காதலுக்குப் புத்துயிர்.  -கிரீஸ்  
இருவரைக் காதலிக்கும் ஒரு பெண் இருவரையும் ஏமாற்றுவாள்.  - போர்ச்சுக்கல்  
செம்பு நாணயம் துருப்பிடித்த காதலுக்குத்தான் சரி.

 -ரஷ்யா  
காதல் ஒரு வளையம், வளையத்திற்கு முடிவே கிடையாது.  -( ,, ) 
ஒருவன் மீது காதல் தோன்றி விட்டால், அவன் குளிக்காமலிருக்கும் பொழுதே, வெண்மையாகத் தோன்றுவான்.  -( ,, ) 
ஒருத்தி இனிமையா யிருக்கிறாள் என்பதற்காகக் காதலிக்க வேண்டாம், வயதாகிவிட்டது என்பதற்காக அவளைத் தள்ளவும் வேண்டாம்.  -( ,, )  பஞ்சை நேசிப்பது போல் என்னை நேசி; நூல் அதிக
மென்மையாகும் பொழுது அதிகப் பஞ்சை விட்டும், நூல் அறுந்தவுடன் ஒட்டியும் ஆதரவு காட்டுவது

போல, என்னை வைத்துக் கொள்ளவும்.  -ஆப்பிரிகா  
அவசரக் காதல் சீக்கிரம் சூடாகி, சீக்கிரம் குளிந்து விடும்.  -இங்கிலாந்து  
அரசர், கெய்ஸர், பிரபு, சட்டங்கள் ஆகிய அனைத்திற்கும் மேற்போனது காதல்.  -( ,, ) 
காதல்தான் காதலுக்குப் பரிசு.  -( ,, )  காதலுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை.
 - இங்கிலாந்து  
காதலின் இனிமைகளில் கண்ணீர் கலந்திருக்கும்.  -( ,, ) 
காதலுக்காக உயிரை விடுபவர்கள் அளவுக்கு அதிகமாகக் காதலிப்பவர்கள்.  -( ,, ) 
காதல் ஒருவகைப் போர் முறையாகும்.  -லத்தீன்  
காதலிலும் மரணத்திலும் நம்வலிமை பயனில்லை.  -ஸ்பெயின்  
காதலே கள்வர்களைத் தயாரிக்கிறது; காதலை எந்தக் கள்வரும் கவர்வதில்லை.  -சுவீடன்  
காதல் தான் புக முடியாத இடத்தில் ஊர்ந்து சென்று விடும்.  -( ,, ) 
காதலால் வீரரானோர் பலர்; ஆனால் மூடரானோர் அவர்களை விட அதிகம்.  -( ,, ) 
நெருப்பு அருகிலிருந்து சுடும், அழகு தூரத்திலிருந்து சுடும்.  -சுவிட்சர்லந்து  
காதலித்தால் சந்திரனைக் காதலி, திருடினால் ஒட்டகத்தைத் திருடு.  - எகிப்து  
காதல் கட்டுப்பாடற்ற கழுதை.  -ஆப்பிரிகா  ரொட்டியும் உப்பும் இல்லாவிட்டால், காதல் இருக்க முடியாது.  -போலந்து  
காதல் முதலில் ஆடவனின் கண் வழியாகவும், பெண்ணின் காது வழியாகவும் நுழைகிறது.  -( ,, ) 
முதன்மையான அன்பு தாயன்பு, அடுத்தது நாயன்பு,

அதற்கும் அடுத்தது காதலியின் அன்பு.  -( ,, ) 
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel