←குடும்பம்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிசகோதரர்

மாமியார்→

 

 

 

 

 


439232குடும்பப் பழமொழிகள் — சகோதரர்தியாகி ப. ராமசாமி

 

 


சகோதரர்


சகோதரனைப் போன்ற நண்பனில்லை, சகோதரனைப் போன்ற பகைவனுமில்லை.  - இந்தியா  கைகளும் கால்களும் போன்றவர்கள் சகோதரர்கள்.  -சீனா  
உடன் பிறந்தார்கள் ஒத்து வேலை செய்தால், மலைகளெல்லாம் பொன்னாகும்.  -( , , )  சகோதரர்களாயிருங்கள், ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.  -அரேபியா  
சொந்த சகோதரர்கள் கவனமாகக் கணக்கு வைத்திருப்பார்கள்.  சீனா  
இளைய சகோதரனுக்குப் புத்தி அதிகம்.  -இங்கிலாந்து  
சகோதரன் என்பவன் இயற்கையாக நமக்கு அளித்துள்ள நண்பன்.  -ஃபிரான்ஸ்  
அவர்கள் சகோதரர்களானாலும், அவர்களுடைய பைகள் சகோதரிகளில்லை.  - துருக்கி  
தாயும் பிள்ளையும் ஒன்றானாலும், வாயும் வயிறும் வேறு.  -தமிழ்நாடு  
மூன்று சகோதரர்கள் மூன்று கோட்டைகள்.  - போர்ச்சுகல் 
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel