←உடற் குறைகள்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிஆரோக்கியம்

நோய்→

 

 

 

 

 


439244குடும்பப் பழமொழிகள் — ஆரோக்கியம்தியாகி ப. ராமசாமி

 

 


ஆரோக்கியம்

 
நல்ல காற்று ஆயிரம் அவுன்ஸ் மருந்துக்குச் சமானம்.

 -ஜப்பான்  
ஆரோக்கியமுள்ளவனுக்குத் தினசரி திருமணம்தான்.

 - துருக்கி  
முகமலர்ச்சி, நிதானமான வாழ்க்கை, அமைதி-இவை உள்ள இடத்தில் வைத்தியருக்கு வேலையில்லை.

 - ஜெர்மனி  
மக்கள் ஆரோக்கியமாயிருந்தால், வைத்தியர்களுக்கு நோய் வரும்.  -( , , )  
இரவில் ஓர் ஆப்பிளை உண்டு வந்தால், பல் வைத்தியருக்கு நம்மிடம் வேலையில்லை.  - இங்கிலாந்து  
சூரியன் போகாத இடத்திற்கு வைத்தியர் போகிறார்.

 -இதாலி  
செல்வமில்லாமல் ஆரோக்கியம் மட்டும் இருந்தால் அதுவே பாதி நோயாகும்.  -( , ,)  
உடல் நலமுள்ளவனுக்கு ஒவ்வொரு நாளும் விருந்துதான்.  - துருக்கி  
ஒரு வேளை உணவை இழத்தல் நூறு வைத்தியர்களை அழைப்பதைவிட மேலானது.  -ஸ்பெயின்  இரவுச்சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் சிறிது உலாவுதல் நலம்.  -லத்தீன்  
நன்றாயிருக்கும் உடலிலேயே நல்ல மனம் தங்கியிருக்கும்.  - ஜெர்மனி  
உடல் நலமாயிருக்கும் பொழுதே நோயைப்பற்றி ஆராய்ந்து தெரிந்து கொள்.  -( , ,) 
ஐந்துக்கு எழுந்திரு, ஒன்பதுக்கு உணவருந்து, ஐந்துக்குச் சாப்பிடு, ஒன்பதுக்கு உறங்கு.

 -ஃபின்லந்து  
ஒருவனுக்கு உடல் நலம் குறைவு என்றால், எல்லாமும் குறைவு என்று பொருள்.  -ஃபின்லந்து  உணவு, அமைதி, முகமலர்ச்சி ஆகிய மூவருமே உலகில் தலைசிறந்த மருத்துவர்கள்.  - இங்கிலாந்து  தாகத்தோடு படுக்கச் செல்பவன் உடல் நலத்தோடு விழித்தெழுவான்.  -( , ,) 
நல்ல மனைவியும் உடல் நலமும் மனிதனின் சிறந்த செல்வம்  -( , ,) 
முன்னிரவில் தூங்கி, அதிகாலையில் எழுந்திருப்பவனுக்கு உடல் நலமும், செல்வமும் அறிவும் பெருகும்.  -( , ,)  
வைத்தியர்களைவிட உணவுமுறை அதிகக் குணமுண்டாக்கும்.  -( , ,) 
நீண்ட நாள் வாழ்வதற்குக் கதகதப்பான உடையணியவும்

மிதமாக உண்ணவும், நிறைய நீர் பருகவும்.  -( , ,)  
மதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் அமர்ந்திரு, இரவு உணவுக்குப்பின் ஒரு மைல் நட.  -( , ,) 
குளிர்ச்சியான தலையும், சூடான பாதங்களும் நீண்ட வாழ்வுக்கு உகந்தவை.  -( , ,) 
ஆரோக்கியமுள்ள உடல் ஆன்மாவுக்கு விருந்து மண்டபம்; நோயுள்ள உடல் அதன் சிறைக்கூடம்.  -பேக்கன் 
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel