‘வேங்கடம் முதல் குமரிவரை’ கட்டுரைத் தொகுதிகள் நான்கு இதுவரை வெளிவந்திருக்கின்றன. தமிழ் அன்பர்கள் அப்புத்தகங்களை வாங்கிப் பெரும் ஆதரவு அளித்து இருக்கிறார்கள். அது காரணமாக இரண்டாம் பதிப்பு வெளியிடும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அன்பர்களுக்கு எல்லாம் என் நன்றி உரியது.

இந்த முதல் புத்தகம் வெளிவந்த உடனேயே, பட உலக அதிபர் திரு.A.K.வேலன், அந்த ஆண்டின் சிறந்த புத்தகம் என்று கருதி ரூபாய் ஆயிரம் பரிசு கொடுத்துப் பாராட்டியிருக்கிறார்கள். இவை எல்லாம் எனக்கு மிகவும் உற்சாகம் தருகின்றன. அவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘சித்ரகூடம்’
திருநெல்வேலி-6

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்
⁠⁠28.2.64

Comments
Please join our telegram group for more such stories and updates.telegram channel