ஜோதிடத்தில் ஒருவர் செய்த பாவங்களைக் குறிக்கும் கிரகம் ராகுவாகும். ஒருவர் பெற்ற சாபங்களைக்குறிக்கும் கிரகம் கேதுவாகும். பாவங்களில் கொடிய பாவங்களாக கொலை, களவு இவை இரண்டையும் குறிப்பிடுகிறார்கள்.  கொலை,களவு இவை இரண்டு விசயங்களுக்கும் காரகம் வகிக்கும் கிரகம் ராகுவாகும். முன் ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு உரிய தண்டனையை இந்த ஜென்மத்தில் ராகு வழங்குவார். பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறது விவிலியம்
(The Bible). ராகு தரும் தண்டனை நீண்ட கால நோய் , நிரந்திர ஊனம் மற்றும் மரணமாகும். 

அடுத்து (கேது) சாபம்:

ஒருவருக்கு முறையாக கிடைக்க வேண்டியதை கிடைக்க விடாமல் செய்வதால், ஒருவருக்கு மனவருத்தம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டால், ஒருவரை பற்றி அவதூறு, வீண் பழி, கேலி, கிண்டல் செய்து அவரது மனதை புண் படுத்துதல். ஒருவர் மீது பொறாமை பட்டு அவரை பற்றி பொது வெளியில் விமர்சிப்பது, அசிங்கப்படுத்துவது, 
ஒருவருக்கு கிடைக்க வேண்டிய விஷயத்தை தனது முயற்சியால் கிடைக்க விடாமல் செய்வது. இருவருக்கு இடையில் சண்டை ஏற்படுத்தும் நோக்கில் கோள் மூட்டுவது. அடுத்தவர் குடும்பத்தில் மனவருத்தம் பிரிவை உண்டு பன்னுவது. அவர்களுடைய சாபத்திற்கு உள்ளாகிறார்கள் மனிதர்கள். 

இவ்வாறு முன் ஜென்மத்தில் பிறருக்கு தடையாக இருந்தவர்களுக்கு உரிய தண்டனையை இந்த ஜென்மத்தில் கேது வழங்குவார். கேது ஒரு ஜாதகருக்கு கிடைக்க வேண்டியதை கிடைக்க விடாமல் தடை செய்வார்.

•    திருமணம், 
•    குழந்தை பாக்கியம்,
•    சொத்து சுகம்,
•    தாம்பத்திய வாழ்க்கை,
•    காதல் தோல்வி,
•    வாகனம், 
•    ஒரு பதவி,
•    அங்கீகாரம்,
•    வேலை வாய்ப்பு,
•    உரிய நேரத்தில் கடன். 

போன்ற முக்கிய விஷயத்தை தேவையான நேரத்தில் கிடைக்க விடாமல் மனம் நோகடித்து வாழ்க்கையை வெறுக்க வைக்கும். 

இதற்கு பரிகாரம்:

விதை மண்ணில் போட்டால் செடி முளைத்தே தீரும். மேற்கூறிய விஷயங்கள் நாம் இனி யாருக்காவது செய்தால் நாம் அதை அனுபவித்தே ஆகவேண்டும். ஆகையால் இனி நமது வேலையை மட்டும் பார்ப்போம். மகிழ்வாக வாழ்வோம்.

Please join our telegram group for more such stories and updates.telegram channel