←i. ராணி மங்களேஸ்வரி நாச்சியார்

சேதுபதி மன்னர் வரலாறு  ஆசிரியர் எஸ். எம். கமால்ii. அண்ணாசாமி சேதுபதி

iii. விஜயரகுநாத ராமசாமி சேதுபதி→

 

 

 

 

 


418964சேதுபதி மன்னர் வரலாறு — ii. அண்ணாசாமி சேதுபதிஎஸ். எம். கமால்

 

 

II அண்ணாசாமி சேதுபதி (கி.பி. 1812-1815)
இராணி மங்களேஸ்வரி நாச்சியாருக்குப் பின், பதவிக்கு வந்த இவர் முத்து விஜயரகுநாத சேதுபதி என்ற பெயருடன் அழைக்கப்பட்டார். இவர் சிறு வயதினராக இருந்ததால், பிரதானி தியாகராஜ பிள்ளை நாட்டு நிர்வாகத்தைக் கவனித்து வந்தார். இவரது ஆட்சியில் குறிப்பிடத்தக்கவை ஏதுமில்லை. என்றாலும், பதவி நீக்கம் செய்யப்பட்ட முத்துராமலிங்க சேதுபதியின் ஒரே மகளான சிவகாமி நாச்சியார் இராமநாதபுரம் சீமையைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டு மதுரையிலும் சென்னையிலுமாக வழக்குகளைத் தொடர்ந்தார். இந்த வழக்குகளின் தீர்ப்பு சிவகாமி நாச்சியாருக்குச் சாதகமாய் அமைந்ததால் இராமநாதபுரம் ஜமீன்தாரி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் கும்பெனியாருக்குச் செலுத்த வேண்டிய பேஷ்குஷ் தொகையை வசூலித்து ஒழுங்காகச் செலுத்த முடியாததால் கும்பெனியார் ஜமீன்தாரியை கி.பி. 1815-ல் மீண்டும் அண்ணாசாமியிடம் ஒப்படைத்தனர். அவர் 1820-இல் இறப்பதற்கு முன்னால் தனது மைத்துனர் இராமசாமித் தேவரைச் சுவீகார புத்திரனாக நியமித்தார்.


 

 

 


 

Comments
Please join our telegram group for more such stories and updates.telegram channel

Books related to சேதுபதி மன்னர் வரலாறு