கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

ஆசிரியர் குன்றக்குடி அடிகளார் சென்னை கம்பன் கழகம் 1975–இல் நிறுவப் பெற்றது. திரு. ஏவி. மெய்யப்பன் அவர்கள் 12.08.1979 அன்று இயற்கை அடைந்தமை வரையில், கழகத்தின் துணைத் தலைவர்களுள் ஒருவராக இருந்து வந்தார்கள். சினிமாத்துறையில் பெரும் பெயர் பெற்றிருந்த அவர்கள், கம்பன் கழகத்தோடு தொடர்பு கொண்டதிலிருந்து கழகத்தின் வளர்ச்சியிலும், கம்பனுடைய கவி நயத்தைப் பருகுவதிலும், முழுமையான ஈடுபாடு கொண்டிருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தாம் தலைவராக இருந்த ஏவி.எம். அறக்கட்டளையினுடைய ஏவி.எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் கம்பன் விழா நிரந்தரமாக நடைபெறுவதற்கு வழி வகுத்ததோடு, கழகத்திற்கு அவ்வப்போது தேவையான உதவிகள் அனைத்தையும் நிறைந்த உள்ளத்துடனும், மட்டற்ற மகிழ்ச்சியுடனும் செய்து வந்தார்கள். அன்னாருடைய மறைவுக்குப்பின், அமரர் ஏவி.எம். அவர்களின் குடும்பத்தினர், அதே ஈடுபாட்டையும் அக்கறையையும் காட்டி வருகிறார்கள். அமரர் ஏவி.எம். அவர்களுடைய நினைவில், ஆண்டுதோறும் கம்பனைப் பற்றிச் சென்னைக் கம்பன் கழகத்தின் ஆதரவில், ஒரு நினைவுச் சொற்பொழிவு நடக்க வேண்டுமென்று விரும்பி அதற்காக ஆவன செய்வதற்கு முன் வந்தார்கள். அந்தத் திட்டத்தின்படி அமரர் ஏவி.எம். அவர்களின் இவ்வாண்டின் (பதினோராம் ஆண்டைய) நினைவுச் சொற்பொழிவு 1994–ஆம் ஆண்டு, ஜூலைத் திங்கள் 28–ஆம் நாள் ஏவி.எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. சொற்பொழிவைத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் “கம்பன் கண்ட ஆட்சியில்-அரசியல், சமூகம்” என்ற தலைப்பில் நிகழ்த்தினார்கள். இந்தியன் வங்கித் தலைவர் திரு. எம். கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை ஏற்றார்கள். இந்த நினைவுச் சொற்பொழிவின் நூல் வடிவமே இது. இந்தச் சொற்பொழிவினை ஏற்பாடு செய்து, அதனைக் கம்பன் கழகத்தின் மூலம் நிறைவேற்றிய ஏவி.எம். குடும்பத்தார்க்கு எங்கள் மனம் கனிந்த நன்றி. கம்பன் கழகத்தார் சென்னை.

Tamil EditorTamil editor will bring best of tamil literature before you.
Please join our telegram group for more such stories and updates.telegram channel